Posts

Showing posts from June, 2019

மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு.

Image
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி நிலையங்களை தேட ஆரம்பித்தால் உங்களிடம் பல்வேறு விருப்பேற்புகள் (choice) உண்டு. உங்களது விருப்பமாக நாங்கள் இருக்க வேண்டும். மற்றவர்களை காட்டிலும் நாங்கள் ஒரு நல்ல முறையில் தனித்துவமானவர்கள் என்று எண்ணுகிறோம். மருத்துவ மாணவர்களே! கிருஷ்ணாவின் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். என்ன செய்கிறோம் மற்றும் எப்படி செய்கிறோம் என்பதில் கிருஷ்ணா நிறுவனம் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நேர்மையாக இருக்கும். இது கிருஷ்ணாவின் நெறியாகும். நாங்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கும் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்களது குறிக்கோள் உயர்தரக் கல்வியை கற்பித்து முழுமையான அக்கறையுடன் மாணவர்களை கவனிப்பதேயாகும். மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்கிறார்களா என்பதும் மாணவர்கள் சரியாக அதை பயன்படுத்துகிறார்களா என்பதும் முழுமையாக கண்காணிக்கப்படும். எங்கள் கற்பிக்கும் முறையானது நெகிழ்வான தன்மை உடையது அதாவது ஒரு மாணவனின் ஆளுமைக்கேற்ப மாற்றப்படும். ஆசிரியர்களின் கல்வி தகுதி பற்றி பொய் சொல்வதில் கிருஷ்ணா நிறுவனத்திற்கு ஈ...

மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது.

Image
மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது. மாணவர்களே! உங்கள் கனவை நிஜமாக்க நீங்கள் எழுதிய நீட் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட தயார் செய்யும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியுள்ளீர்களா? நீட் தேர்வில் வெற்றி பெற நீங்கள் இணைந்து படித்த நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது ஆதரவை தெருவித்ததா? "ஒரு வருடம் இடைவேளை எடுத்து படிக்கலாம்" என்பது உங்களது முடிவானால் நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சூழ் நிலை ஏற்படும். இச்சூழ்நிலையை கையாள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 2020 இறுதியில் உங்களது முடிவை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருந்தக் கூடாது. மேலும் இப்போரில் நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்கள் பலர் ஒரு வருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை மறுப்பார்கள். பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். அதனால் காலத்தின் முடிவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடும். உங்கள் குடும்பத்தார் மட்டுமே உங்கள் பக்கம் நின்று உங்களை ஊக்குவிப்ப...

இழந்தது போதும்....NEET 2020

Image
நீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான ரேத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன? பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது? நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது? நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா? போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா? தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன? நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும். "திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு CB...

மன்னித்திருங்கள் சகோதரிகளே

Image

மன்னித்திருங்கள் சகோதரிகளே

Image
அமைதியான முகம், தெளிவான பார்வை, திடமான சிந்தனை,  கனிவான குரல், ஜெயித்தே தீருவேன் என்பது போன்று அவளின் உடல்மொழி கொண்ட துணிவான இவளை தற்கொலைக்கு தூண்டியது யார்? அல்லது எது? பிறந்த சாதியா? வளர்ந்த ஊரா? பணக் கஷ்டமா? பாடத்திட்டமா? இவையனைத்திற்கும் காரணம் பெரும்பாலான மக்களுக்கு நீட் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பதேயாகும். இதை பற்றி பல பயிற்சி நிறுவனங்களும் சரியாக தெளிவாக பெற்றோர்களிடம் தெருவிப்பதில்லை. நீட் தேர்வை பற்றி அனைவரும் அறிந்து புரிந்துக்கொள்வது அவசியம். 40 நாட்களில் 98 பாடப்பகுதிகளை நன்கு புரிந்து படிப்பது என்பது எளிதல்ல என நாம் அனைவரும் அறிவோம். இவ்வுண்மையை அறிந்தும் பல நிறுவனங்கள் தரும் பொய்யான நம்பிக்கையும் இந்நிகழ்வுக்கு ஓர் காரணமாகும். ஏ. பி. ஜே. அப்துல் கலாம்,சி.வி.ராமன், சுந்தர் பிச்சை, ஸ்ரீனிவாச இராமானுஜம் போன்ற பலர் தமிழ்நாட்டில் பிறந்து சாதனைகளை செய்தவர்கள். இவர்கள் எந்த coaching institute சென்றார்கள்? எப்படி பயிற்சி பெற்றார்கள்? தமிழ்நாட்டு மாணவர்களால் முடியாது என்ற கூற்று நமக்கும் எதிர்காலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். "நம்மால் முடியும்", பல சா...

We Made It......100% Result NEET 2019 Krishna Institute Trichy Entrance Coaching Centre

Image
மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற அயராது பாடுபடுவது எங்களுக்கு முதன்முறை அல்ல.பத்து வருடங்களாக இச்சேவையே எங்களது கடமையாகும். இம்முறை எங்களை வேறுப்படுத்துவது என்னவென்றால் 100% ரிசல்ட் எங்கள் சொந்த பிராண்ட் கிருஷ்ணா நிறுவனத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் உங்களுக்கு புதியதாக இருக்கலாம் ஆனால் நாங்கள் இத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறோம்.மேலும், நீண்ட காலமாக போட்டித்தேர்வுகளில் பல மாநில டாப்பர்ஸ் மற்றும் முடிவுகளை உருவாக்கியுள்ளோம். நாங்கள் அளிக்கும் கோர்ஸ்களில்  ஒன்றல்ல NEET நாங்கள் அளிக்கும் முதன்மையான கோர்ஸ் NEET ஆகும். Scholarship தேர்வுகளை நடத்தி வெறும் டாப்பர்ஸை தேர்ந்தெடுத்து ரிசல்ட் உருவாக்குவதிலும் டாப்பர்ஸை வைத்து மார்க்கேட்டிங் செய்வதிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்பித்து அவரவர் ஆற்றலுக்கேற்ப பயிற்சி அளித்து, மேலும் கடினம் என கருதும் பகுதியில் அதிக கவனம் செலுத்தி போட்டி நிலைக்கேற்ப அவர்களை உருவாக்கி மருத்துவ கனவை நிறைவேற்றுவதில் மட்டுமே எங்களுக்கு ஈடுபாடுண்டு. தனிப்பட்ட கவனிப்பு, தனிப்பட்ட வழிக்காட்டல் மற்றும் அட்டவணைகளே எங்களத...

இளைஞனே !

Image
இளைஞனே ! இயலாது என்ற வார்த்தையைக் கூறி உன் விழிகளை நீயே  மூடிக் கொள்ளாதே! தமிழ் அகராதியில் மட்டும் இருக்க வேண்டிய வார்த்தை அது! உன் அகராதியில் அல்ல! இயலும் என்ற வார்த்தையைக் கூறி உன் விழிகளை நீயே திறந்து கொள் விழிகளை விரைவாய் திறந்துப் பார்த்து வெற்றி எனும் பாதையில் பயணத்தைத் தொடர்! இனிதாய்த் தொடர்ந்த இன்பப் பயணத்தின் இடையில் தோல்வி எனும் பாதை வரலாம்! தடைக் கற்களும் உன்னால் செதுக்கப்பட வேண்டும் வெற்றிப் படிக்கட்டுகளாக! எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும். உன் மனதில் நிறுத்தப்பட வேண்டிய வாசகங்கள்! லட்சியம் என்னும் எண்ணத்தை உன்னுள் வை. அலட்சியம் செய்யாமல் அதை நினை. அரை நொடி கூட வீணாக்க வேண்டாம். உன் முயற்சியின் விளைவு இறுதியில் மாறும் இமாலய வெற்றியாக! விடா முயற்சியுடன் முயற்சி செய்தால் விடிந்த பிறகு உன் வானில் ஜொலிக்கும் நட்சத்திரமே நீதான்...

Work hard with strong determination. Execute your plans in a distinctive manner. Achieve your goals and Be a shining star!

Image
All Medical aspirans who wish to aggrandize their learning must have a definite spadework. In this Tech world with the concept of instant success, students lack the ability of anticipation. Their immediate decisions and last minute struggles make them realise the importance of planning in advance. Having a random, haphazard and an ineffective way of study is not going to bear any fruit. Instead of being a dead loss, plan and execute your ideas to pull out all the stops. Prope r planning enhances efficient learning. It directs you to your goal, intensifies your confidence and leads to the path of success. Even a little plan goes a long way and it is a requisite factor in every step further. A good plan is essential and a great execution is crucial. Execution of your plans efficiently and in a unique manner makes you a successful person. Everyone has their own plans, sometimes even the same plan. So what makes you to stand out from the crowd is the execution of your plan. The way you ex...

நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம்

Image
நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம் நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், "பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு" கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். "யாரிடமும் வாங்க முடியாத யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் நேரம்" இதை, ஒவ்வொருவரும் மிக விரைவிலோ அல்லது வாழ்நாளிலோ கட்டாயமாக உணர்வோம். மாணவர்கள் நேரத்தை வீணாக்காது தேர்வில் வெற்றியடைய சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நேரத்தை கடைபிடிக்கும் முறை: பெரும்பாலான மாணவர்களின் பொதுவான குற்றச்சாட்டு , அதிகமான பாடப்பகுதிகள் மற்றும் அதை முழுமையாக படிக்க முடியவில்லை என்பதே. இதை தவிர்க்க, முதலில் எப்பாடப்பகுதி முதன்மையானதோ,மிக அவசியமானதோ அப்பாடப்பகுதியை கவனத்துடன் படிக்க வேண்டும். அட்டவணை தயாரிக்க வேண்டும்: ஓர் நாளில் எந்த பாடம், எவ்வளவு நேரம் படிக்கவேண்டும் என்பதனை அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்அட்டவணையை ஒவ்வொரு நாளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் அட்டவணையை கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். உங்களால் முடியாது என்...

சற்று சிந்தியுங்கள்....

Image
சற்று சிந்தியுங்கள்.... நீட் தேர்வை எதிர்கொள்ளும் எந்த ஒரு மாணவனும் , அரசுப் பொது தேர்வு முடிந்தவுடனேயே திட்டமிட்டு அனைத்து பாடப்பகுதிகளையும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்களால் இதை சரியானபடி செயல்படுத்தமுடியாமல் போகிறது. மாணவர்களே! உங்களின் இலட்சியம் நிறைவேற, உங்களின் எதிர்காலம் நல் வழியில் அமைய, உங்களால் கவனம் சிதறாமல், சோம்பல் கொள்ளாமல் செயல்பட முடியாமல் போவது ஏன்? "வருங்காலம் நல்வழியில் அமைய, வரும் ஒரு காலம் என வேண்டாதார் இவ்வுலகில் இல்லை." ஆனால் காலம் கிட்டிய பொழுதும் அதை சரியாக பயண்படுத்தாமல் போவது நல்லதா? உங்களின் வருங்காலம் சிறப்பாக அமையவும், இலட்சியத்தை அடையவும் உங்களிடம் 40 நாட்கள் உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற உங்களின் இலட்சியத்தில் வெற்றிபெற, ஒரு நீட் பயிற்சி மையத்தை தேடிச் செல்வது பயணுள்ளதா? ஒரு வேளை நீட் பயிற்சி மையத்தில் சேர முடிவெடுத்தீர்களானால், நீங்கள் விசாரிக்க வேண்டியவை பல. இன்றோ புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் எங்கும் துவங்கப்பட்டுள்ளன. அதனால் சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்...

உங்கள் முடிவு உங்கள் கையில் NEET Crash Course I Best Neet Coaching Centre in Trichy I Neet Coaching in Trichy

Image
உங்கள் முடிவு உங்கள் கையில் மருத்துவராக வேண்டுமென்ற கிடைத்ததற்கரிய இலட்சியத்தைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு... நீட் தேர்வை மேற்கொள்ள; உங்களை தயார்செய்துக் கொள்ள உங்களிடம் 45 நாட்கள் உள்ளது. "காலம் பொன் போன்றது" என்பதை அறிந்து, நேரத்தை வீணாக்காமல் உங்களது கனவை நிறைவேற்ற இந்த 45 நாட்களை பயன்படுத்திக்கொள்வது உங்கள் முயற்சியில் உள்ளது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் "இது பொழுது போக்கி பழுது பார்க்கும் பிறவியில்லை! இலட்சியம் கொண்டு தோல்வியை வெல்லும் பிறவி நண்பனே அலட்சியத்தை தடை செய், இலட்சியம் கொள். இலட்சியத்தை நிறைவேற்ற அயராது பாடுபடு..." நீட் பயிற்சி மையங்களை தேடிச் செல்லும் மாணவர்களே! உங்களின் கவனத்திற்கு... மனிதனின் ஐந்து விரல்களும் ஒரே தோற்றமளிப்பதில்லை. ஒருவன், அவனிடமே வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில் , அனைவருக்கும் ஒரே திட்டமிட்ட பயிற்சி என்பது பயனுள்ளதா? சற்று சிந்தித்துப் பாருங்கள்...... அனைவருக்கும், அவரவர்களின் ஆற்றலுக்கேற்ப கற்கும் முறை வேறுபடலாம். முன் திட்டமிட்ட பயிற்சி முறையைக் காட்டிலும், அவரவர்களின் தேவையறிந்து , ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும் ...

ஆழம் அறியாமல் காலை விடாதே

Image
ஆழம் அறியாமல் காலை விடாதே இன்றைய சூழ்நிலையில் மருத்துவராக நினைக்கும் அனைத்து மாணவர்களிடமும் கேட்கப்படும் முதன்மையான கேள்வி நீட் தேர்வைப் பற்றியே ஆகும். நீட் தேர்வைப் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை பல, அதில் சில இதோ உங்கள் கவனத்திற்காக 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுள் 32,570 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி சதவீதம் 39.84% ஆகும். ஆனால் கேரளத்தில் சேர்ச்சி சதவீதம் 80%, தெலுங்கானாவில் 77%, கர்நாடகாவில் 71%, ஆந்திராவில் 72%. தமிழ்நாட்டை விட பிற மாநிலத்தில் தேர்ச்சி சதவீதம் இருமடங்கு உள்ளது. மேலும், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு 39.55% சதவீதத்துடன் நீட் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் கடைசி ஐந்து மாநிலங்களுள் ஒன்றாகும். சென்ற வருடம் தேர்ச்சி மதிப்பெண் 96 தான்; அதாவது 2017 ஆம் ஆண்டை விட 11 மதிப்பெண் குறைந்துள்ளது. இந்நிலையிலும், தேர்ச்சி சதவீதம் குறையக் காரணம் என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை மேற்கொண்ட மாணவர்களுள் 60% சதவீத மாணவர்கள் பல்வேறு நீட் பயிற்சி மையங்களில் "கிராஷ் கோர்ஸில்" இணைந்துள்ளனர். நீட் தேர்வில் வெற்றிப் பெறுவதற்காக...

வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? I Krishna Institute Trichy I Neet Coaching In Trichy I Best Neet Coaching

Image
வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா? ஒருவன் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. அதை கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அமைந்து விடுகிறதா? அப்படியே அமைந்தாலும் அவர்களால் முழு கல்வியையும் பெற முடிகிறதா? "எளிமையினால் ஒருவனுக்கு படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்" என பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். இலட்சியம் உண்டு. ஆற்றலும் உண்டு. ஆனால் வாய்ப்பில்லை. ஏன்? வறுமை....... பணமே பிரதானமாகிப்போன இன்றைய சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு கால சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கைகொடுக்க "கிருஷ்ணா நிறுவனத்தின்" ஒரு முயற்சி. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" கல்வி கற்க வாய்ப்பற்ற நிலை நேர்ந்தால் அதைத் தவிர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். பொருளாதார நிலை காரணமாக பல ஆயிரம் கொடுக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் 10 பேருக்கு இலவச நீட் பயிற்சி கிருஷ்ணா நிறுவனத்தில் அளிக்கப்படும். குறிப்பு : இலவசம் என்றால் மனித தர்மத்தை மறந்து தன்னலத்தை பற்றி மட்டும்...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்! I NEET Coaching in Trichy I Best NEET Coaching Centre in Trichy

Image
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்! பெரும்பாலான மாணவர்களின் நீட் தேர்விற்கு தயார் செய்யும் முறை பாடப்பகுதிகளை சிறு துண்டுகளாக பிரித்து பல நிலைகளில் படிப்பதே ஆகும். இம்முறையை கையாளும் பொழுது நீட் தேர்வை நன்றாக எழுதும் அளவிற்கு தயார் செய்து விட்டோம் என்ற நம்பிக்கை உண்டாகும். ஆனால் இதற்கு முரணாக பல மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்தும் நன்றாக எழுத இயலாமல் போவது ஏன்? இவ்வாறு ஏற்பட முக்கிய காரணம் மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு பயம். தேர்வு பயத்தால் படித்த பகுதிகளை மறக்க வாய்ப்புகள் அதிகம்.  இதை தடுத்து நீட் தேர்வை நல்முறையில் எழுத வேண்டுமானால் தொடர்ந்து ரிவிஷன் செய்யும் வகையில் பல மாதிரித் தேர்வுகளை (Mock test) எழுதிப் பழக வேண்டும். மாதிரி தேர்வு என்பது நீட் தேர்வை போல நடத்தப்படும். இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்கள் அனைவரும் அவர்களின் செயல் திறனின் பகுப்பாய்வை (Performance analysis) செய்து அவர்கள் இருக்கும் நிலையை அறிந்துக்கொள்ளலாம். மாதிரித் தேர்வின் பயன்கள்: 1. தேர்வு பயம், பதற்றம், தேர்வை எண்ணி மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்க உபகாரமாய் இத்தேவைகள் அமையும். 2. மாதிரி தேர்வுகள் பல எழுத...