உங்கள் முடிவு உங்கள் கையில்

உங்கள் முடிவு உங்கள் கையில்
மருத்துவராக வேண்டுமென்ற கிடைத்ததற்கரிய இலட்சியத்தைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு...
நீட் தேர்வை மேற்கொள்ள; உங்களை தயார்செய்துக் கொள்ள உங்களிடம் 40 நாட்கள் உள்ளது.
"காலம் பொன் போன்றது" என்பதை அறிந்து, நேரத்தை வீணாக்காமல் உங்களது கனவை நிறைவேற்ற இந்த 40 நாட்களை பயன்படுத்திக்கொள்வது உங்கள் முயற்சியில் உள்ளது.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
"இது பொழுது போக்கி
பழுது பார்க்கும் பிறவியில்லை!
இலட்சியம் கொண்டு
தோல்வியை வெல்லும் பிறவி
நண்பனே அலட்சியத்தை தடை செய்,
இலட்சியம் கொள்.
இலட்சியத்தை நிறைவேற்ற அயராது பாடுபடு..."
நீட் பயிற்சி மையங்களை தேடிச் செல்லும் மாணவர்களே! உங்களின் கவனத்திற்கு...
மனிதனின் ஐந்து விரல்களும் ஒரே தோற்றமளிப்பதில்லை.
ஒருவன், அவனிடமே வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில் , அனைவருக்கும் ஒரே திட்டமிட்ட பயிற்சி என்பது பயனுள்ளதா?
சற்று சிந்தித்துப் பாருங்கள்......
அனைவருக்கும், அவரவர்களின் ஆற்றலுக்கேற்ப கற்கும் முறை வேறுபடலாம். முன் திட்டமிட்ட பயிற்சி முறையைக் காட்டிலும், அவரவர்களின் தேவையறிந்து , ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் முறையே மேன்மையானது. எனவே எந்த பயிற்சி மையம் உங்களின் தேவை அறிந்து செயல்படுகிறதோ, அதை தேர்ந்தெடுங்கள்.
மேலும்,
அடுத்தவர் முடிவெடுக்க - இது
அடுத்தவர் வாழ்க்கையில்லை.
உங்களது வாழ்க்கை!
வெற்றி உண்டாயின் - அது
உங்களின் அயராத முயற்சியாகும்
தோல்வி உண்டாயின் - அது
உங்களின் தவறான முடிவின் காரணமே!
வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே தவறான முடிவை எடுத்து வருந்துவதைக் காட்டிலும், உங்களின் இலட்சியத்தை நிறைவேற்றி வெற்றியின் உச்சிக்கொம்பில் உங்களது கொடி பறக்க, சற்று சிந்தித்து தீர விசாரித்து முடிவெடுங்கள்.
விழித்தேழுங்கள்!
உங்களது எதிர்காலத்தை
சரியாக பயன்படுத்துங்கள்!

Comments