ஆழம் அறியாமல் காலை விடாதே

ஆழம் அறியாமல் காலை விடாதே
இன்றைய சூழ்நிலையில் மருத்துவராக நினைக்கும் அனைத்து மாணவர்களிடமும் கேட்கப்படும் முதன்மையான கேள்வி நீட் தேர்வைப் பற்றியே ஆகும்.
நீட் தேர்வைப் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை பல, அதில் சில இதோ உங்கள் கவனத்திற்காக
2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுள் 32,570 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி சதவீதம் 39.84% ஆகும். ஆனால் கேரளத்தில் சேர்ச்சி சதவீதம் 80%, தெலுங்கானாவில் 77%, கர்நாடகாவில் 71%, ஆந்திராவில் 72%. தமிழ்நாட்டை விட பிற மாநிலத்தில் தேர்ச்சி சதவீதம் இருமடங்கு உள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு 39.55% சதவீதத்துடன் நீட் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் கடைசி ஐந்து மாநிலங்களுள் ஒன்றாகும்.
சென்ற வருடம் தேர்ச்சி மதிப்பெண் 96 தான்; அதாவது 2017 ஆம் ஆண்டை விட 11 மதிப்பெண் குறைந்துள்ளது.
இந்நிலையிலும், தேர்ச்சி சதவீதம் குறையக் காரணம் என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை மேற்கொண்ட மாணவர்களுள் 60% சதவீத மாணவர்கள் பல்வேறு நீட் பயிற்சி மையங்களில் "கிராஷ் கோர்ஸில்" இணைந்துள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றிப் பெறுவதற்காகவே நிறுவப்பட்ட பயிற்சி மையங்களில் இணைந்தும் தேர்ச்சி பெற முடியாமல் போனது ஏன்?
மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்களா?
இல்லை.....
அவர்களின் நிலைமை என்ன?
சிலர் தன் கனவை நிறைவேற்ற; நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக, மீண்டும் ஒரு வருடம் "ரிப்பீட் கோர்ஸில்" சேர்ந்து படிக்கிறார்கள்.
பலர், வெறும் 40 நாட்களை அடிப்படையாகக் கொண்டு தன்னால் இயலாது என நினைத்து, தன் கனவை மறந்து வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.
உங்களின் கனவை வெறும் 40 நாட்களைக் கொண்டு நிர்ணயமிப்பதா?
2019 இல் நீட் தேர்வை எழுத்தத் தயார் செய்துக் கொண்டிருக்கும் மாணவர்களே!
40 நாளில் நீட் தேர்வில் வெற்றி பெறுவது இயலாதச் செயல் இல்லை. எனவே, ஒரு நல்ல நீட் பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுத்து விடாமுயற்சியுடன் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று:
வருடம்தோறும் நீட் தேர்வின் முடிவுகள் அறுவித்தவுடன், நீட் பயிற்சி மையங்கள் அனைத்தும் அவரவர் விளம்பரங்களில் அரசு மருத்துவக் கல்லூரியில் "மெரிட் சீட்" பெற்ற, அவர்களிடம் படித்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவார்கள்.
இதில் வெடிக்கியான உண்மை என்னவென்றால்,
விளம்பரங்கள் அனைத்திலிருக்கும் மொத்த எண்ணிக்கையைவிட அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மெரிட் சீடின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இது எப்படி சாத்தியம்?






Comments

Popular posts from this blog

உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.

Concerned about negative marks in NEET practice? Find solutions here!

What Makes us Different........ Krishna Institute Trichy