மன்னித்திருங்கள் சகோதரிகளே


அமைதியான முகம்,
தெளிவான பார்வை,
திடமான சிந்தனை, 
கனிவான குரல்,
ஜெயித்தே தீருவேன் என்பது போன்று
அவளின் உடல்மொழி கொண்ட
துணிவான இவளை
தற்கொலைக்கு தூண்டியது யார்?
அல்லது எது?
பிறந்த சாதியா?
வளர்ந்த ஊரா?
பணக் கஷ்டமா?
பாடத்திட்டமா?
இவையனைத்திற்கும் காரணம் பெரும்பாலான மக்களுக்கு நீட் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பதேயாகும். இதை பற்றி பல பயிற்சி நிறுவனங்களும் சரியாக தெளிவாக பெற்றோர்களிடம் தெருவிப்பதில்லை. நீட் தேர்வை பற்றி அனைவரும் அறிந்து புரிந்துக்கொள்வது அவசியம். 40 நாட்களில் 98 பாடப்பகுதிகளை நன்கு புரிந்து படிப்பது என்பது எளிதல்ல என நாம் அனைவரும் அறிவோம். இவ்வுண்மையை அறிந்தும் பல நிறுவனங்கள் தரும் பொய்யான நம்பிக்கையும் இந்நிகழ்வுக்கு ஓர் காரணமாகும்.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்,சி.வி.ராமன், சுந்தர் பிச்சை, ஸ்ரீனிவாச இராமானுஜம் போன்ற பலர் தமிழ்நாட்டில் பிறந்து சாதனைகளை செய்தவர்கள்.
இவர்கள் எந்த coaching institute சென்றார்கள்? எப்படி பயிற்சி பெற்றார்கள்?
தமிழ்நாட்டு மாணவர்களால் முடியாது என்ற கூற்று நமக்கும் எதிர்காலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். "நம்மால் முடியும்", பல சாதனைகளை செய்ய ஆற்றலை உடையவர்கள் நாங்கள் என்ற நம்பிக்கையே வாழ்வில் வெற்றியை தரும்.
பெற்றோர்களும் மாணவர்களும் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நீட் தேர்வும் மாணவர்கள் எழுதும் +2 பொதுத் தேர்வும் ஒன்றல்ல. இரண்டின் கேள்வி முறை வேறு, நடத்தும் முறை வேறு. எனவே இரண்டிற்கும் படிக்கும் முறையும் வேறுபடும். நீட் என்பது மருத்துவ நுழைவு தேர்வு என்பதனால் அது கடினமாகதான் இருக்கும். எனவே அதில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
மனித தர்மத்தையும் மனிதநேயத்தையும் மறந்து தன்னலத்தை பற்றி சிந்திக்கும் இவ்வுலகில் மக்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படுகீறார்கள்.மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரும் பயிற்சி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க சமூக வளைத்தளத்தை நாடிச் செல்கீறார்கள். இதை அறிந்த நிறுவனங்கள் வளைத்தளத்தில் தனது நிறுவனம் முதலில் வர பணத்தை செலுத்தி முதலாம் இடத்தில் வருகிறார்கள். எனவே வளைத்தள விளம்பரங்களில் நம்பிக்கை கொள்ளாமல், பட்டியலிலுள்ள நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரியுங்கள்.
மேலும் அனைவரும் கவனிக்க வேண்டியவை என்னவென்றால், தமிழ்நாட்டில் 1.40 இலட்ச மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.ஆனால் Merit seat வெறும் 2447 தான். இவ்விவரங்கள் கூறும் உண்மை:
வாய்ப்புகள் குறைவு
போட்டிகள் அதிகம்
எனவே கடின உழைப்பு அவசியம்.
விழிப்புணர்வின்றி வீழ்ந்தது போதும்.........


Comments