இளைஞனே !

இளைஞனே !
இயலாது என்ற
வார்த்தையைக் கூறி
உன் விழிகளை நீயே 
மூடிக் கொள்ளாதே!
தமிழ் அகராதியில் மட்டும்
இருக்க வேண்டிய வார்த்தை அது!
உன் அகராதியில் அல்ல!
இயலும் என்ற
வார்த்தையைக் கூறி
உன் விழிகளை
நீயே திறந்து கொள்
விழிகளை விரைவாய்
திறந்துப் பார்த்து
வெற்றி எனும் பாதையில்
பயணத்தைத் தொடர்!
இனிதாய்த் தொடர்ந்த
இன்பப் பயணத்தின் இடையில்
தோல்வி எனும்
பாதை வரலாம்!
தடைக் கற்களும்
உன்னால் செதுக்கப்பட வேண்டும்
வெற்றிப் படிக்கட்டுகளாக!
எப்படியும் வாழலாம்
என்றில்லாமல்
இப்படித்தான் வாழ வேண்டும்.
உன் மனதில்
நிறுத்தப்பட வேண்டிய வாசகங்கள்!
லட்சியம் என்னும் எண்ணத்தை
உன்னுள் வை.
அலட்சியம் செய்யாமல்
அதை நினை.
அரை நொடி கூட
வீணாக்க வேண்டாம்.
உன் முயற்சியின் விளைவு
இறுதியில் மாறும்
இமாலய வெற்றியாக!
விடா முயற்சியுடன்
முயற்சி செய்தால்
விடிந்த பிறகு
உன் வானில் ஜொலிக்கும்
நட்சத்திரமே நீதான்...
Comments