மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனின் மனம் வேறு எந்தத் துறையையும் நாடிச் செல்வதரிது. Krishna Institute Neet Coaching Centre trichy Krishna Institute Trichy Neet Repeater Course 2022
மாணவர்களே! உங்கள் கனவை நிஜமாக்க நீங்கள் எழுதிய நீட் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட தயார் செய்யும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியுள்ளீர்களா?
நீட் தேர்வில் வெற்றி பெற நீங்கள் இணைந்து படித்த நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது ஆதரவை தெருவித்ததா?
"ஒரு வருடம் இடைவேளை எடுத்து படிக்கலாம்" என்பது உங்களது முடிவானால் நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இச்சூழ்நிலையை கையாள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 2021 இறுதியில் உங்களது முடிவை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருந்தக் கூடாது.
மேலும் இப்போரில் நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நண்பர்கள் பலர் ஒரு வருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை மறுப்பார்கள். பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். அதனால் காலத்தின் முடிவில் நீங்கள் தனியாக இருக்க நேரிடும். உங்கள் குடும்பத்தார் மட்டுமே உங்கள் பக்கம் நின்று உங்களை ஊக்குவிப்பார்கள்.
பல முறை உங்களது முடிவை நினைத்து நீங்கள் வருந்த வாய்ப்புண்டு. இம்முடிவை எடுப்பது எளிதல்ல, இதற்கு நீங்கள் மனதளவிலும் உடல் அளவிலும் தயாராக இருக்க வேண்டும். இடையூறுகள் எதுவாயினும் அதை கையாள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் பலமுறை ஏற்படாமல் இருக்க ஊடகங்களிடமிருந்தும் உங்களின் தன்னம்பிக்கையை சிதைக்கும் நண்பர்களிடமிருந்தும் தள்ளியிருப்பது நல்லது. மேலும் ஒருவருடம் இடைவேளை எடுத்துப் படிக்கும் முடிவை நீங்கள் எடுக்க காரணம் என்ன என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பொழுது பல தேர்வுகளை நீங்கள் கையாள வேண்டும். பல தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். அப்பொழுது நம்பிக்கையை தளர விடாமல் முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு சிறிய சண்டையில் தோல்வியுற்றிருக்கலாம் ஆனால் உங்கள் கடினமான உழைப்பால் போரை வெல்வீர்கள். மேல் கூறியதற்கு முரணாக எழுதும் சிறிய சிறிய தேர்வுகளில் நீங்கள் நிறைய மதிப்பெண்களை எடுக்கலாம். இதனால் நீட் தேர்வை எளிதாக கடக்கலாம் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பளிக்காதீர்கள். எவ்வித தடைகள் நேர்ந்தாலும் முயற்சி செய்வதையும் உங்களது கடின உழைப்பையும் கைவிடாதீர்கள். ஏனென்றால், "முயற்சி திருவினையாக்கும்".
ஒன்றை மறவாதீர்கள் நீங்கள் மருத்துவத்தை தேர்ந்தெடுக்கவில்லை மருத்துவம் உங்களை தேர்ந்தெடுத்தது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் உங்களால் முடியும் என்பதனால். மேலும் நீங்கள் சிறந்த மருத்துவராக விளங்குவீர்கள் என்பதனால். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment