விழித்துரு வீட்டிலிரு விலகியிரு
ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படை யாக அமைவது கல்வி.
நீட் தேர்வு என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு
எங்கும் பணம் எதிலும் பணம். கருணை குறைந்து பணமே பிரதானமாகிபோன இந்த கால சக்கரத்தில் மக்களே மக்களை ஏமாற்றும் நிலை உருவாகியுள்ளது
இன்றைய சூழ்நிலை காரணமாக நம்மை ஈர்க்கும் தொழில்நுட்பம் பிற்காலத்தில் நமக்கே விணையாக முடிகிறது
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைய சூழ்நிலை காரணமாக வெளியில் செல்ல இயலாமல் ஆன்லைன் வகுப்புகளை zoom app மூலமாக பல பயிற்சி நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்
இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசாங்கத்தின் சைபர் செக்யூரிட்டி அதிகாரபூர்வமாக zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை படுத்தியுள்ளது
சராசரியாக இந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர் அதில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் ஒரு வருட இடைவெளி எடுத்து படிக்கும் மாணவர்களும் கிட்டதட்ட ஒரே அளவிற்கு மதிப்பெண் எடுக்க வாய்ப்புண்டு அதாவது இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புண்டு.
எனவே நமக்கு நாமே அட்டவணை படுத்தி கொண்டு புரிதலுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவது இயலாத செயல் அல்ல ஆனால் அது எளிதும் அல்ல
மருத்துவம் வியாபாரம் ஆகிபோன இந்த சூழ்நிலையில் scholarship தேர்வுகளை நடத்தி database சேகரித்து மக்களை ஏமாற்றும் ஒரு சமூகம். பொருளாதார நிலை காரணமாக பல ஆயிரம் கொடுக்க இயலாத பல மாணவர்கள் இந்த scholarship தேர்வு என்னும் வலையில் விழுகின்றனர் ஆனால் அதில் பெரிதாக கட்டணம் குறைவு ஒன்றுமில்லை இதை தான் பல பயிற்சி நிறுவனங்கள் ஏற்ற தாழ்வு இல்லாத கல்வி அனைவருக்கும் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
முழு மனதுடன் இறங்கினால் முடியாதது ஒன்றுமில்லை.
அறியாமையுடன் நூறு நாள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வதே உயர்வு.
புத்தி சொல்கிறவனுக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்காதே அவன் சொல்லில் தப்பு இருக்கிறதா என்று மட்டும் பார்
உன் வாழ்க்கை உன் வசப்படும்
Comments
Post a Comment