ஆரம்பமாகிவிட்டது!

ஆரம்பமாகிவிட்டது!
கிருஷ்ணா நிறுவனத்தில் foundation course -Std IX & X(KVPY, NTSE ,Olympaid), two year integrated course- Std XI, one year integrated course- Std XII
அட்மிஷன் ஆரம்பமாகிவிட்டது.
உங்களது கனவை நிறைவேற்ற அயராது உழைப்பதே கிருஷ்ணா நிறுவனத்தின் நோக்கம்.
ஆசை! கனவு! இலட்சியம்! இவை அனைத்தும் உண்டு. சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற இலட்சியத்தை உங்களது இலக்காய் மாற்றிவிட்டீர்கள். தற்போதைய நிலைமையில் மருத்துவராக வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உங்களது கனவை நிறைவேற்ற எவ்வாறு தயார் செய்ய வேண்டும்? தேர்விற்காக தயார் செய்வதை எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும்?
நேரத்தை வீணாக்காமல் சரியாகத்தான் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை எவ்வாறு கண்டறிவது?
போன்ற கேள்விகள் சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். எவ்வித கலக்கமுமின்றி நீட் தேர்வுக்காக உங்களை சிறந்த முறையில் தயார் செய்து கொள்வதற்கு முதலில் எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நேரத்தை சரியாகப் பிரித்து பயன்படுத்த வேண்டும்.
கல்வி நிபுணர்களின் பரிந்துரையின்படி நீட் தேர்விற்காக தயார் செய்துகொள்வதை தொடங்குவதற்கு சரியான நேரம் +1 .
தேர்விற்காக நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாக இருப்பதால் அனைத்து பாடத்தையும் படிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். எனவே +1 யில் படிக்கத் தொடங்கினால் இரண்டு வருடத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பாடங்களையும் முற்றிலும் படித்து பல ரிவிஷன் செய்து இயற்பியல் (physics) மற்றும் வேதியல் (chemistry) பல கணக்குகளை கையாண்டு பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படும். மேலும் நீட் தேர்விற்கான பாடப்பகுதியில் உள்ள அனைத்து பாடங்களும் உங்களின் +1 மற்றும் +2 பாடப்பகுதியே ஆகும். இவை அனைத்தையும் மனதில் வைத்து சரியான நேரத்தை அறிந்து தயார் செய்யத் தொடங்கினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
முன்பே தொடங்க வேண்டுமா?
இது அவரவரின் தனிப்பட்ட விருப்பமாகும். மருத்துவராக வேண்டும் என்ற அரிய கனவை நிறைவேற்ற ஒன்பதாம் வகுப்பிலேயே தயார் செய்யத் தொடங்குவது சிறந்தது. நுழைவுத் தேர்வுகளின் பாடத்திட்டத்தின் அடித்தளமாக அமையும் பகுதியே ஒன்பதாம் வகுப்பு ஆகும். இந்நேரத்தில் நீட் தேர்விற்காக படிக்கத் தொடங்கினால் பாடப்பகுதியில் உள்ள நுட்பமான செய்தியையும் கவனத்துடன் படிக்க இயலும். நான்கு வருடம் படிப்பதால் உங்களுக்கு பல ரிவிஷன் செய்ய வாய்ப்பு கிட்டும். மேலும் எவ்வித பதற்றமும் தேர்வு பயமுமின்றி தேர்வை சிறந்த முறையில் எழுதி வெற்றி காணும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பள்ளிப்பருவத்தில் விளையாட்டுத்தனமாக இருப்பது பொதுவான ஒன்று தான்.மேலும் இது பல நினைவுகள் உருவாக்கும் பருவம் என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். நினைவுகளை உருவாக்குவதிலும் உங்களின் நுழைவுத் தேர்வுக்காக படிப்பதிலும் ஒரு சமநிலை ஏற்பட வேண்டும். இவை இரண்டையும் சமநிலைப்படுத்திக் கொள்ளாமல் செயல்பட்டால் உருவான நினைவு இன்பத்தைக் காட்டிலும் துன்பத்தையே தரும்.
"வருமுன் காப்பதே சிறந்தது" என்ற பழமொழிக்கேற்ப எவ்வித துன்பமும் ஏற்படாமல் இருக்க, உங்களது நிலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களுக்கான, உங்களை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் ஒரு முடிவை எடுத்து அதன்படி செயலாற்றுங்கள்.
வெற்றி நிச்சயம்!



Comments

Popular posts from this blog

உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.

What Makes us Different........ Krishna Institute Trichy

The Bhagavad Gita's Teachings on the Importance of Focus, Individual Attention, and Quality in Education: A Reflection on Class Sizes