மருத்துவராக வேண்டும் என்ற, ஒவ்வொரு மாணவனின் இலட்சியக் கனவும் நினைவாக சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்!

மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலட்சியம்.
மருத்துவராக வேண்டும் என்ற, ஒவ்வொரு மாணவனின் இலட்சியக் கனவும் நினைவாக சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்!

சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
நீட் பயிற்சி மையத்தைப் பற்றி நாம் அறிய , வழிகள் இரண்டு.
1. விளம்பரம்
2. விமர்சனம்

1.விளம்பரம்:
நீட் பயிற்சி மையங்கள் , தனது நிறுவனத்தைப் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு "இதுவே நம்பர்:1 நீட் கோச்சிங் சென்டர்" என விளம்பரம் செய்வது பொதுவான ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு பல நீட் பயிற்சி மையங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆனால்,
"கண்ணால் பார்ப்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்!"

எனவே விளம்பரத்தைக் காட்டிலும் விசாரிப்பதே சிறந்தது

2.விமர்சனம்:
உங்களது குழந்தையின் எதிர்க்காலத்திற்காக பதினெட்டு வருடம் பாடுப்பட்டு , இப்பொழுது நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பதில் சோம்பல் கொள்வது ஏன்?
சோம்பலை முறித்து , தீர விசாரித்து , சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்.
இதுவே சரியான முறை.
இணையத்தில் விமர்சனங்களை தேடுவதைக் காட்டிலும் உங்களது பட்டியலில் இருக்கும் மையங்களில் படிக்கும் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டு, அவர்களின் பதிலை வைத்து தேர்ந்தெடுப்பது மிகவும் சரியானது.

கேட்க வேண்டியக் கேள்விகள்:
1. ஏன் இந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்தாய்?
2.நீங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு அந்த நீட் பயிற்சி மையம் உள்ளதா? உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறதா?
3.அவர்கள் கூறிய வார்த்தையைக் காப்பாற்றும்படி அந்த நிறுவனம் செயல்படுகிறதா?
தீர விசாரியுங்கள் , சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள்.






Comments