NTA வின் மீண்டும் வருகை!


40 நாள் ரிவிஷன் கோர்ஸ் என்று அழைக்கப்படும் கிராஷ் கோர்ஸில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். மேலும் நன்றாகப் படிக்க எங்கள் வாழ்த்துக்கள்.

NTA, JEE Main தேர்வுடன் ஏப்ரல் மாதத்தில் வரும் 8, 9, 10 ,12 அன்று மீண்டும் வருகை தர காத்திருக்கிறது. கடந்த ஆண்டு வரை CBSE நடத்திக் கொண்டிருந்த நீட் மட்டும் JEE தேர்வை இம்முறை முதன் முதலில் NTA நடத்தவிருக்கிறது. மேலும் நீட் தேர்வை எழுத காத்திருக்கும் 15.14 லட்சம் மாணவர்களிலிருந்து வெறும் 60,000 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இச்சூழ்நிலையானது NTA விற்கு சவாலை உண்டாக்க வல்லது.
இச்சவாலை NTA எவ்வாறு கடக்கப் போகிறது?

கிருஷ்ணா நிறுவனத்தின் research team அனுசரிகளின் படி சில புள்ளி விவரங்கள். கீழ் கூறப்பட்டுள்ள விவரங்கள் உங்களின் கவனத்தை சிதைக்காமல் படிப்பை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுள் 65 சதவீத மாணவர்கள் +2 முடித்து முதல் முறை நீட் தேர்வு எழுதுபவர்களே.
9.65 லட்சம் மாணவர்கள் JEE ஜனவரி 2019  தேர்வை எழுதியுள்ளார்கள். இவ்வெண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 2.5 லட்சம் அதிகம் உள்ளது.இவர்கள் தேர்வை எழுதியதற்கு முக்கிய காரணம் தேர்வின் முறையையும் கேள்விகள் அமைந்திருக்கும் முறையும் கண்டறிவதற்கே ஆகும்.

JEE ஜனவரி தேர்வு எளிதாக இருந்தது என்பதே பல மாணவர்களின் கருத்து. இக்கருத்துக்கேற்ப பெரும்பாலான மாணவர்கள் 50 percentile க்கு மேல் வாங்கியுள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து பல மாணவர்கள் JEE ஏப்ரல்  தேர்வையும் நீட் தேர்வையும் எழுத தயாராக இருப்பது போல் உணர்கிறார்கள்.

JEE தேர்வு முடிவின்படி தமிழ்நாடு All India Rank பட்டியலில்   22  ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. தேர்வு எளிதாக இருந்தும் தமிழ்நாட்டில் 100 percentile அனைவரும் வாங்காமல் போனது ஏன்?
 JEE ஜனவரி தேர்வுக்கு முரணாக JEE ஏப்ரல் தேர்வு கடினமாக இருக்கும். இந்நிலையானது பல மாணவர்களை அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்; நீட் தேர்வை நினைத்து பயத்தை உண்டாக்கும். மனதளவில் மாணவர்கள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவை எண்ணி பயம் ஏற்படும்.மேலும் நினைத்த மதிப்பெண்ணை வாங்காமல் போனால் அவர்களுக்கு மன அழுத்தம் மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படும். இதை அறிந்தே +2 பொதுத் தேர்வின் முடிவு மற்றும்  ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் JEE தேர்வின் முடிவுகள் நீட் தேர்வுக்கு முன் வெளியிடப்படுகிறது.
இதை நீங்கள் எவ்வாறு கையாள போகிறீர்கள்?

போட்டிகள் அதிகம்! தேர்ந்தெடுக்கும் முறை கடினம்! என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

தேர்வுகளை நன்கு எழுத எங்கள் வாழ்த்துக்கள்.


You Dream....... We Will Make It Happen......

Krishna Institute 
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
+91 8680856666
+91 8608546666
krishnainstitutetrichy@gmail.com
All the best.

Comments