காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!


பெரும்பாலான மாணவர்களின் நீட் தேர்விற்கு தயார் செய்யும் முறை பாடப்பகுதிகளை சிறு துண்டுகளாக பிரித்து பல நிலைகளில் படிப்பதே ஆகும். இம்முறையை கையாளும் பொழுது நீட் தேர்வை நன்றாக எழுதும் அளவிற்கு தயார் செய்து விட்டோம் என்ற நம்பிக்கை உண்டாகும். ஆனால் இதற்கு முரணாக பல மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்தும் நன்றாக எழுத இயலாமல் போவது ஏன்?
இவ்வாறு ஏற்பட முக்கிய காரணம் மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு பயம். தேர்வு பயத்தால் படித்த பகுதிகளை மறக்க வாய்ப்புகள் அதிகம். இதை தடுத்து நீட் தேர்வை நல்முறையில் எழுத வேண்டுமானால் தொடர்ந்து ரிவிஷன் செய்யும் வகையில் பல மாதிரித் தேர்வுகளை (Mock test) எழுதிப் பழக வேண்டும்.
மாதிரி தேர்வு என்பது நீட் தேர்வை போல நடத்தப்படும். இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்கள் அனைவரும் அவர்களின் செயல் திறனின் பகுப்பாய்வை (Performance analysis) செய்து அவர்கள் இருக்கும் நிலையை அறிந்துக்கொள்ளலாம்.
மாதிரித் தேர்வின் பயன்கள்:
1. தேர்வு பயம், பதற்றம், தேர்வை எண்ணி மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்க உபகாரமாய் இத்தேவைகள் அமையும்.
2. மாதிரி தேர்வுகள் பல எழுதி பழகினால் கேள்விக்கு இவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்ற வித்தையை அறியலாம்.
3. முழு பாடத்திட்டத்தையும் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ள அதை மீண்டும் மீண்டும் ரிவைஷ் செய்ய வேண்டும். தொடர்ந்து ரிவைஷ் செய்ய இத்தேர்வுகள் வாய்ப்பளிக்கும்.
4. நீட் தேர்வில் வெற்றி பெற முதலில் நேரத்தை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். எவ்வாறு நேரத்தை சரியாக பயன்படுத்துவது என்பதை அறிந்தால் நீங்கள் நீட் தேர்வில் பாதி வெற்றி அடைந்ததற்கு சமம்."நேர மேலாண்மை" (Time Management) எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து செயல்பட மாதிரி தேர்வுகள் ஒரு ஊன்று கோலாய் திகழும்.
5. உங்கள் தவறுகளிலிருந்து படித்து அதை திருத்திக் கொண்டு நீட் தேர்வில் எவ்வித தவறான பதிலையும் தேர்ந்தெடுக்காமல் இருக்க மாதிரி தேர்வு உதவும்.
6. இத்தேர்வுகள் அனைத்தும் அட்டவணை அமைத்தே நடத்தப்படும். இதன் மூலம் மிகவும் அவசியமான பாடப் பகுதிகள் எவை மேலும் அதில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எது என்பதை அறிந்து செயல்படலாம்.
எனவே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற உங்களின் கனவை நிறைவேற்ற பல மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழகுங்கள்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
வாய்ப்புகள் எளிதாகக் கிடைப்பதில்லை. எனவே கிடைத்த வாய்ப்பை உங்கள் சோம்பலினால் நழுவ விடுவது பெரும் துன்பத்தை ஏற்படும். துன்பங்கள் எதுவும் ஏற்படாமல் நீங்கள் இன்பத்துடன் வாழ வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.


Comments

Popular posts from this blog

Concerned about negative marks in NEET practice? Find solutions here!

உங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.

Unlocking Success in NEET: Squeeze Every Drop of Potential