வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்படுவதா?

ஒருவன் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி.

அதை கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அமைந்து விடுகிறதா? அப்படியே அமைந்தாலும் அவர்களால் முழு கல்வியையும் பெற முடிகிறதா?

"எளிமையினால் ஒருவனுக்கு படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்" என பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார்.

இலட்சியம் உண்டு. ஆற்றலும் உண்டு. ஆனால் வாய்ப்பில்லை. ஏன்?
வறுமை.......

பணமே பிரதானமாகிப்போன இன்றைய சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு கால சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கைகொடுக்க "கிருஷ்ணா  நிறுவனத்தின்" ஒரு முயற்சி.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
                                                           
கல்வி கற்க வாய்ப்பற்ற நிலை நேர்ந்தால் அதைத் தவிர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். பொருளாதார நிலை காரணமாக பல ஆயிரம் கொடுக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் 10 பேருக்கு இலவச நீட் பயிற்சி கிருஷ்ணா நிறுவனத்தில் அளிக்கப்படும்.

குறிப்பு : இலவசம் என்றால் மனித தர்மத்தை மறந்து தன்னலத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் சூழ்நிலை இது. பிறரின் தன்னலத்திற்காக பலரின் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது.
எனவே, பள்ளி முதன்மையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இம்முயற்சியினால் நன்மை அடையும் மாணவர்கள் எவரேனும் உங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய ஒரு வாய்ப்பு. ஆசிரியராகிய நீங்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே அம்மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.
வாடிய பூக்களை மலரச் செய்யுங்கள்!

மனம் உண்டால் மார்க்கம் உண்டு!
மேலும்,
"ஏற்றத்தாழ்வு இல்லாத பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்படும்"
இது கிருஷ்ணா நிறுவனத்தின் வாக்குறுதியாகும்.

மாணவர்களின் வேர்வை துளிகளை வைரமாக மாற்ற எங்களை தயங்காமல் அணுகவும்.
அணுக வேண்டிய முகவரி:

krishnainstitutetrichy@gmail.com
www.krishnainstitute.net
Krishna Institute
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
+91 8680856666
+91 8608546666

Comments