நீட் 2019 தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்படுமா??????

தற்போது NTA வெளியிட்ட JEE தேர்வின் தேதிகள் ஏப்ரல் 7, 8 ,9, 10 ,12. ஏப்ரல் 11 அன்று தேர்தல் காரணமாக தேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நீட் தேர்வையும்  NTA நடத்துகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இச்சூழ்நிலையில் அனைவரின் மனதிலுள்ள குழப்பம் நீட் தேர்வை பற்றியே ஆகும்.

"JEE தேர்வை போல தேர்தல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நாள் மாறுமா?மாறாதா?"
என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றியிருக்கும்.

ஒருவேளை நீட் தேர்வு நடைபெறும் நாளை மாற்றினால், ஏற்படுபவை யாவை ??
      +2 மாணவர்களுள் 65℅ சதவீத மாணவர்கள் நீட் தேர்வுக்காக தயார் செய்கிறார்கள். அதில் 40 சதவீத மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி மையங்களில் இணைந்து படிக்கிறார்கள். நீட் தேர்வு நடைபெறும் நாள் மாறினால், இவர்களுக்கு தேர்வுக்காக தயார் செய்யும் காலம் அதிகரிக்கும். அது அவர்களின் இலக்கை அடைய பொன்னான வாய்ப்பாய் அமையும்.
      முன் கூறியதற்கு முரணாக 2018-ஆம் ஆண்டில் தனது கனவை நிறைவேற்ற முடியாமல், ஒரு வருடம் மீண்டும் நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். "ரிப்பீடர்" என அழைக்கப்படும் இவர்களுக்கு ஒருவித பயம் ஏற்படலாம். மேலும் அவர்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம்.இது அவர்களுக்கு இடையூறாய் அமையலாம்.
      நீட் பயிற்சி மையங்கள் அனைத்தும் கிராஷ் கோர்ஸின் பாடத்திட்டத்தை மாற்றும் நிலை ஏற்படும்.
      தேர்வுக்காக தயார் செய்யும் நேரம் அதிகரிப்பதால் இம்முறை போட்டியும் அதிகரிக்கும். ஒவ்வொரு மதிப்பெண்ணும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

மக்களாகிய உங்களின் கருத்து யாது?

தேர்தல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நாளை மாற்றுவது பயனுள்ளதா??

Comments