சற்று சிந்தியுங்கள்...

சற்று சிந்தியுங்கள்....
நீட் தேர்வை எதிர்கொள்ளும் எந்த ஒரு மாணவனும் , அரசுப் பொது தேர்வு முடிந்தவுடனேயே திட்டமிட்டு அனைத்து பாடப்பகுதிகளையும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்களால் இதை சரியானபடி செயல்படுத்தமுடியாமல் போகிறது.
மாணவர்களே! உங்களின் இலட்சியம் நிறைவேற, உங்களின் எதிர்காலம் நல் வழியில் அமைய, உங்களால் கவனம் சிதறாமல், சோம்பல் கொள்ளாமல் செயல்பட முடியாமல் போவது ஏன்?
"வருங்காலம் நல்வழியில் அமைய, வரும் ஒரு காலம் என வேண்டாதார் இவ்வுலகில் இல்லை."
ஆனால் காலம் கிட்டிய பொழுதும் அதை சரியாக பயண்படுத்தாமல் போவது நல்லதா?
உங்களின் வருங்காலம் சிறப்பாக அமையவும், இலட்சியத்தை அடையவும் உங்களிடம் 40 நாட்கள் உள்ளது.
மருத்துவராக வேண்டும் என்ற உங்களின் இலட்சியத்தில் வெற்றிபெற, ஒரு நீட் பயிற்சி மையத்தை தேடிச் செல்வது பயணுள்ளதா?
ஒரு வேளை நீட் பயிற்சி மையத்தில் சேர முடிவெடுத்தீர்களானால், நீங்கள் விசாரிக்க வேண்டியவை பல.
இன்றோ புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் எங்கும் துவங்கப்பட்டுள்ளன. அதனால் சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பதில் கலக்கம் ஏற்படலாம். எனவே நீட் பயிற்சி மையத்தில் படிப்பதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை விசாரிப்பதை விட்டுவிட்டு முதலில் அப்பயிற்சி மையத்தில் எப்படிப்பட்ட பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதனை விசாரியுங்கள். மேலும் அவர்களின் பயிற்சிமுறை உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா என்பதை அறிந்து செயல்படுங்கள்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ;
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பாருங்கள், ஓடுவது முள் அல்ல உங்களது வாழ்க்கை.
சற்று சிந்தித்துச் செயல்படுங்கள்.

Comments