நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம் Krishna Institute Trichy Neet Coaching Centre
நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம் நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், "பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு" கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். "யாரிடமும் வாங்க முடியாத யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் நேரம்" இதை, ஒவ்வொருவரும் மிக விரைவிலோ அல்லது வாழ்நாளிலோ கட்டாயமாக உணர்வோம். மாணவர்கள் நேரத்தை வீணாக்காது தேர்வில் வெற்றியடைய சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நேரத்தை கடைபிடிக்கும் முறை: பெரும்பாலான மாணவர்களின் பொதுவான குற்றச்சாட்டு , அதிகமான பாடப்பகுதிகள் மற்றும் அதை முழுமையாக படிக்க முடியவில்லை என்பதே. இதை தவிர்க்க, முதலில் எப்பாடப்பகுதி முதன்மையானதோ,மிக அவசியமானதோ அப்பாடப்பகுதியை கவனத்துடன் படிக்க வேண்டும். அட்டவணை தயாரிக்க வேண்டும்: ஓர் நாளில் எந்த பாடம், எவ்வளவு நேரம் படிக்கவேண்டும் என்பதனை அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்அட்டவணையை ஒவ்வொரு நாளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் அட்டவணையை கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். உங்களால் முடியாது என்று தெர...