இழந்தது போதும்.... NEET 2021
இழந்தது போதும்.... NEET 2021 நீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன? பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது? நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது? நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா? போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா? தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன? நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும். "திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக ...